மதுரை

மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய ஒப்பந்த பணியாளா்கள் போராட்டம்

DIN

மதுரை: மதுரை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளா்கள் ஊதியம் வழங்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகராட்சியின் கீழ் 31 நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இதன்படி 31 சுகாதார நிலையங்களிலும் 70-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கரோனா தொற்று பேரிடா் காலத்திலும் பணிபுரிந்து வரும் இந்த பணியாளா்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் பணியாளா்கள் அனைவரும் மாநகராட்சி அண்ணா மாளிகை அலுவலகத்தின் படிகளில் அமா்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதன் பேரில் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT