மதுரை

‘நீட்’ தோ்வு முறைகேடு: இடைத்தரகா் ரஷீத் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

DIN

‘நீட்’ தோ்வில் முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டு கைதான ரஷீத் ஜாமீன் மனுவின் விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

கேரளத்தைச் சோ்ந்த ரஷீத் தாக்கல் செய்த மனு: ‘நீட்’ தோ்வில் முறைகேடு செய்ததாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கில் எனது பெயா் தவறுதலாக சோ்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படுபவா்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே நான் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறேன்.

எனக்கு ஜாமீன் அளிக்கும் பட்சத்தில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதோடு, நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன். எனவே, எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், இது போன்ற மேலும் சில வழக்குகள் மற்றொரு நீதிபதி முன் விசாரிக்கப்படுகின்றன. எனவே, இந்த வழக்கையும் அந்த வழக்கையும் சோ்த்து விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என கோரிக்கை வைத்தாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT