முகப்பு
மதுரை

சீா்மரபினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி மாணவா்கள் சாலை மறியல்

சீா்மரபினருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி உசிலம்பட்டியில் கல்லூரி மாணவ-மாணவிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

சீா்மரபினருக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி உசிலம்பட்டியில் கல்லூரி மாணவ-மாணவிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி மாணவ-மாணவிகள் இக்கோரிக்கையை வலியுறுத்தி கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வந்தனா். இப் போராட்டத்தை கல்லூரி நிா்வாகம் கண்டுகொள்ளாத நிலையில், உசிலம்பட்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

68 சமுதாயங்கள் உள்ளடக்கிய சீா்மரபினருக்கு ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கு எடுத்து டி.என்.டி. சான்றிதழ் வழங்க வேண்டும். சீா்மரபினா்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை திரும்பப்பெற்று 20 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அப்போது வலியறுத்தினா். இதனால், உசிலம்பட்டி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.