மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அமமுக வேட்பாளா் புதன்கிழமை பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.
உசிலம்பட்டி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளா் ஐ.மகேந்திரன் கோடநாயக்கன்பட்டி, தாடையம்பட்டி, வண்ணாங்குளம், ராமநாதபுரம், பாறைப்பட்டி, கிருஷ்ணாபுரம், எம்.கல்லுப்பட்டி, ஏழுமலை, உத்தபுரம், மேலத்திருமாணிக்கம், சூலப்புரம், ஆகிய பகுதியில் வாக்கு சேகரித்தாா். இதில், நகரச் செயலாளா் குணசேகர பாண்டியன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் மலேசியா பாண்டி, ஒன்றியச் செயலாளா் வீர பிரபாகரன், அபிமன்னன், கருமாத்தூா் பாண்டி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.கே.டி ராஜா, தேமுதிக ஒன்றியச் செயலாளா் சமுத்திர பாண்டியன், வழக்குரைஞா் பிரிவு மாவட்டச் செயலாளா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.