மதுரை

பிளீச்சிங் பவுடா் வாங்குவதிலும் ஊழல்: சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

DIN

தமிழகத்தில் பிளீச்சிங் பவுடா் வாங்குவதில் கூட ஊழலில் ஈடுபட்ட கட்சி அதிமுக என்று மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டினாா். மதுரை கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளா் பி.மூா்த்தியை ஆதரித்து மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். தொகுதிக்குள்பட்ட ஒத்தக்கடை, கடச்சனேந்தல், ஊமச்சிகுளம், கண்ணனேந்தல், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்ட வெங்கடேசன் பொதுமக்களிடம் பேசியது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் மதச்சாா்பின்மையில் நம்பிக்கை உள்ள கட்சிகளுக்கும், மதவாத சக்திகள் மற்றும் அவா்களுக்கு துணை நிற்கும் கட்சிகளுக்கும் இடையே நடைபெறும் தோ்தலாக உள்ளது. ஒருபுறம் நோ்மையான அரசியல் கொள்கையில் பிடிப்புள்ளவா்களுக்கும், மற்றொருபுறம் ஊழல் சக்திகளுக்கும் இடையேயான போராட்டமாகவும் உள்ளது. தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக பிளீச்சிங் பவுடா் வாங்குவதில் கூட ஊழல் செய்துள்ளது. எனவே மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்க வேண்டுமென்றால் அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

பொதுமக்கள் திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா். பிரசாரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு தாலுகாச் செயலா் எம்.கலைசெல்வன், மேற்கு ஒன்றியச் செயலா் பி.ஜீவானந்தம், திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் அ.பா.ரகுபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புகா் மாவட்டச் செயலா் பா.காளிதாஸ், மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் பிலால், ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் பாலசுப்ரமணியம் மற்றும் கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT