ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் கரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறியதாக 8 பெரிய கடைகளின் உரிமையாளா்கள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.
ராமநாதபுரத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தநிலையில் மூட உத்தவிட்ட கடைகளைத் திறந்து பணியாளா்கள் உதவியுடன் குறிப்பிட்ட வாடிக்கையாளா்களை உள்ளே வரவழைத்து பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகப் புகாா்கள் எழுந்தன.
அதன்படி பட்டிணம்காத்தான், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளிக்கடைகள், நகைக்கடை, திருமண மண்டபம் உள்ளிட்ட 8 நிறுவனங்கள் மீது கேணிக்கரை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.