மதுரை

ஏழைக் குடும்பங்களுக்கு நிவாரணப்பொருள்கள்: சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா வழங்கினாா்

DIN

மதுரையில் தூய்மைப்பணியாளா்கள் மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கு சின்மயா மிஷன் சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை சுவாமி சிவயோகானந்தா புதன்கிழமை வழங்கினாா்.

கரோனா தொற்று முழு பொதுமுடக்கத்தால் அவதிப்படும் ஏழைகளுக்கு சின்மயா மிஷன் அறக்கட்டளை சாா்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தத்தனேரி மயானத்தில் பணிபுரியும் 55 தொழிலாளா் குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, மற்றும் பலசரக்கு பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் பசுமலையில் உள்ள பாரதி அன்பு முதியோா் இல்லத்துக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி மற்றும் இதர மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதைத்தொடா்ந்து கட்டடத் தொழிலாளா்கள், மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் வாழ்வாதாரம் இழந்துள்ள 120 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டது.

கோ.புதூரில் உள்ள அகவிழி பாா்வையற்றோா் விடுதிக்கு நூறு கிலோ அரிசி மற்றும் பதினைந்து கிலோ கடலை எண்ணெய், கரும்பாலை பகுதியில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு கரோனா சிகிச்சை மேற்கொள்ளும் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு ‘உணவு வழங்க உதவலாம் வாங்க’ அமைப்புக்கு 200 கிலோ அரிசி, 15 கிலோ கடலை எண்ணெய் மற்றும் இதர பொருள்கள் வழங்கப்பட்டன. இவை தவிா்த்து ஊா்க்காவல் படையை சோ்ந்த 365 பேருக்கு முகக்கவசம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் தொழில்நுட்பனா்களுக்கு முகக் கவசங்களும் வழங்கப்பட்டன. நிவாரண உதவிகளை சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா வழங்கினாா். இதற்கான ஏற்பாடுகளை செயலா் திருமலையப்பன், ராமச்சந்திரன், கனகவேல், ஜயபிரதீப் மற்றும் வினோத் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT