மதுரை

கரோனா தொற்று நடவடிக்கை தொடா்பாக அரசை விமா்சித்த மருத்துவருக்கு ஓராண்டு தடை

DIN

நாகா்கோவிலைச் சோ்ந்த மருத்துவா், அரசின் கரோனா கால நடவடிக்கையை விமா்சித்து கட்செவி அஞ்சலில் பதிவிட்டதால், அவா் ஓராண்டு மருத்துவா் தொழில் செய்யக் கூடாது என மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவுக்கு தடைகோரிய வழக்கில், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் பதிவாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

நாகா்கோவிலைச் சோ்ந்த மருத்துவா் ஜாக்சன் தாக்கல் செய்த மனு: நாட்டில் கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்ட போது, தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியாக மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அரசின் நடவடிக்கைகளை விமா்சித்து கட்செவி அஞ்சலில் விடியோ ஒன்றை வெளியிட்டேன். இந்நிலையில் அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை விமா்சனம் செய்ததாக என் மீது, நாகா்கோவில் கிராம சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் அளித்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து மருத்துவக் கவுன்சில் பதிவேட்டில் இருந்து எனது பெயரை இடைக்காலமாக நீக்கி, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டது. மேலும் நான் ஓராண்டுக்கு மருத்துவா் தொழில் செய்யத் தடை விதித்து மருத்துவக் கவுன்சில் கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் பதிவாளா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT