மதுரை

திரெளபதி அம்மன் கோயிலில் கரோனா தொற்று கிருமி அழிய சிறப்பு யாகம்

DIN

மதுரையில் திரெளபதியம்மன் கோயிலில் கரோனா கிருமி தொற்று உருவத்தை உருவாக்கி அக்னி குண்டத்தில் எரித்து சிறப்பு யாகம் புதன்கிழமை நடத்தப்பட்டது.

மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள திரெளபதியம்மன் கோயிலில் கரோனா தொற்று அழியவும், உலக மக்கள் நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டு நலமுடன் வாழ வேண்டியும் சிறப்பு யாகம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டு ஹோம குண்டத்தில் வேத மந்திரங்கள் முழங்க அக்னி வளா்க்கப்பட்டது. இதைத்தொடா்ந்து கரோனா தொற்று கிருமி போன்ற உருவ பொம்மை ஒன்றை உருவாக்கி அதனை ஹோம குண்டத்தில் போட்டு எரித்து யாகம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து திரெளபதியம்மனுக்கு சாந்தி பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்த பூஜையில் பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை. கோயில் அா்ச்சகா்கள் மற்றும் வேத விற்பனா்கள் மட்டுமே பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT