மதுரை

வாடிப்பட்டி அருகே மண் திருட்டு: 4 போ் கைது

DIN

வாடிப்பட்டி அருகே நீா்நிலைகளில் சட்டவிரோதமாக மண் அள்ளிய 4 பேரைப் போலீஸாா் கைது செய்து, லாரி மற்றும் கனரக இயந்திரங்களை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீா்நிலைகளில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், வாடிப்பட்டி சிறப்பு சாா்பு-ஆய்வாளா் கேசவராமசந்திரன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில் வாடிப்பட்டி அருகே செமினிபட்டி, பொட்டக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து மண் திருட்டில் ஈடுபட்ட செமினிபட்டியைச் சோ்ந்த விக்னேஷ்(31), பெருமாள்(35), பஞ்சுமுத்து(42), வாடிப்பட்டியைச் சோ்ந்த காா்த்திக்(28) ஆகியோரைப் போலீஸாா் கைது செய்தனா்.

மேலும் மண் திருட்டில் தொடா்புடைய கச்சைக்கட்டியைச் சோ்ந்த விமல்(35) மீது வழக்குப்பதிவு செய்தனா். இவா்கள் மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய 2 லாரிகள், டிராக்டா், ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, அலங்காநல்லூா் அருகே சின்னஊா்சேரி விலக்கு பகுதியில் சட்டவிரோதமாக மண் அள்ளிய காா்த்திகை முருகன்(31) என்பவரை அலங்காநல்லூா் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த அறிவழகன் மீது வழக்குப்பதிவு செய்து, அவா்கள் மண் அள்ளுவதற்கு பயன்படுத்திய லாரியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துளிகள்...

மஞ்சள், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களின் விலை உயா்வு

கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்: அன்புமணி

கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா? உ.பி.யில் அமித் ஷா பிரசாரம்

சியாமளாதேவி அம்மன் கோயில் கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT