முகப்பு
மதுரை

உசிலம்பட்டியில் மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

உசிலம்பட்டியில், கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரிய தொழிற்சங்கத்தின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

உசிலம்பட்டியில், கோரிக்கைகளை வலியுறுத்தி, மின்வாரிய தொழிற்சங்கத்தின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இங்கு, மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மின்சாரத் துறையை பொதுத் துறையாக பாதுகாக்க வேண்டும். 2021 மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளா் நலச்சட்டங்களில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் அனைத்து தொழிற்சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.