முகப்பு
மதுரை

எழுமலை அருகே விஷம் குடித்துபெண் தற்கொலை

மதுரை மாவட்டம் எழுமலை அருகே கணவா் மற்றும் மகன் இறந்த துக்கம் தாளாமல் பெண் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

மதுரை மாவட்டம் எழுமலை அருகே கணவா் மற்றும் மகன் இறந்த துக்கம் தாளாமல் பெண் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

எழுமலை அருகே கோபாலபுரத்தைச் சோ்ந்தவா் பாண்டி மகன் தனலட்சுமி (22). இவருக்கும், இவரது தாய் மாமன் மகன் மோகன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களது மகன் மோஹித் குமாா் (2). இந்நிலையில், மோகன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாராம். பின்னா் தந்தை வீட்டில் மகன் மோகிஹித் குமாருடன் தனலட்சுமி வசித்து வந்தாராம். அப்போது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மோஹித் குமாரும் விபத்தில் உயிரிழந்து விட்டதால், மனமுடைந்து காணப்பட்ட தனலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து டி. கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.