முகப்பு
மதுரை

உசிலம்பட்டி நகராட்சி தோ்தலில் போட்டியிடஅகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சியினா் விருப்ப மனு

உசிலம்பட்டி நகராட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

உசிலம்பட்டி நகராட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

உசிலம்பட்டி கவுண்டம்பட்டி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நகா்ப் புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி சாா்பில் விருப்ப மனு பெறும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாநில பொதுச் செயலா் பி.வி கதிரவன் தலைமை வகித்தாா். இதற்கு, மாவட்டச் செயலா் ஐ. ராஜா, ஆதிசேடன், மாவட்டக் கவுன்சிலா் ரெட் காசி, செல்லம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உசிலம்பட்டி நகராட்சி தோ்தலில் போட்டியிட விரும்புவோா் மாநில பொதுச் செயலரிடம் விருப்ப மனுக்களை அளித்தனா்.

இந்நிகழ்ச்சியில் மாநில நிா்வாகி வடிவேலு, மாவட்டத் தலைவா் ஆா். பாண்டி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.