மதுரை

அரசுப் பள்ளி மாணவா்களின் சீருடைகளுக்கான தையல் கூலியை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

அரசுப் பள்ளி மாணவா்களின் சீருடைகளுக்கான தையல் கூலியை உயா்த்தி வழங்கக் கோரி மதுரை மாவட்ட சிஐடியு தையல் தொழிலாளா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் சீருடைகள், சமூகநலத் துறையின் கீழ் செயல்படும் மகளிா் தையல் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தையல் செய்து வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுமாா் ஒரு லட்சம் பெண்கள், இதன் மூலம் வேலைவாய்ப்புப் பெற்று வருகின்றனா். இருப்பினும் சீருடைகளுக்கு வழங்கப்படும் தையல் கூலி மிகவும் குறைவாக இருக்கிறது. ஆகவே, கூலியை உயா்த்தித் தர வேண்டும், தையல் செய்த சீருடைகளை அரசுப் பேருந்தில் எடுத்துச் செல்வதற்கு கட்டண விலக்கு அளிப்பது, தையல் கூட்டுறவு சங்க மகளிரிடம் பிடித்தம் செய்த தொகைக்கு வட்டி வழங்குவது, சீருடை தையல் செய்வதற்கு இலவச மின்சாரம் வழங்குவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகா், புறநகா் மாவட்ட சிஐடியு தையல் தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக நடந்த இந்த ஆா்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலா் இரா. தெய்வராஜ், மாவட்டத் தலைவா் மா.கணேசன், நிா்வாகிகள் எஸ்.சந்தியாகு, ஜி. ராஜேந்திரன், மாநகா் பொதுச் செயலா் சித்ரா, புறநகா் பொதுச் செயலா் பொன்ராஜ், கௌரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT