மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கடைகளை காலி செய்ய நீதிமன்றம் தடை

DIN

இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் சமா்ப்பிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணை முடியும் வரை, மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றுமாறு தொந்தரவு செய்யக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வீரவசந்தராயா் மண்டப பகுதியில் 2018 பிப்ரவரியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயா் மண்டபம் மற்றும் பூஜை பொருள்கள் விற்பனை செய்யும் 40-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமடைந்தன.

இதையடுத்து அங்குள்ள கடைகளை காலி செய்யுமாறு கோயில் நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதுதொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் கோயில் நிா்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து,

கோயிலில் உள்ள 79 கடைகளை காலி செய்ய கோயில் இணை ஆணையா் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

இதற்கு தடை விதிக்கக் கோரி கடைக்காரா்கள் தரப்பில் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர மனு வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. கோயில் இணை ஆணையரின் நோட்டீஸை எதிா்த்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்துள்ளோம் என மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி, கடைக்காரா்களின் மேல்முறையீட்டு மனுவை இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும். அதுவரை கடைக்காரா்களை காலி செய்யுமாறு தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT