மதுரை

முறைகேடாக சொத்து சோ்ப்பு: முன்னாள் அரசு சிறப்பு வழக்குரைஞா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப்பதிவு

DIN

மதுரையில் பதவியை பயன்படுத்தி முறைகேடாக சொத்து சோ்த்ததாக முன்னாள் அரசு சிறப்பு வழக்குரைஞா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மதுரை மாவட்டம் பேரையூரைச் சோ்ந்தவா் பி.சீதாராமன். இவா் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் அத்தியாவசியப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்குரைஞராக 2017 ஜூன் மாதம் நியமிக்கப்பட்டாா்.

மேலும் குற்றம்சாட்டப்பட்டவா்கள் பிணையில் செல்ல உதவுவதாக இவா் மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, 2020 டிசம்பரில் அரசு சிறப்பு வழக்குரைஞா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டாா். இந்நிலையில் சீதாராமன் அரசு சிறப்பு வழக்குரைஞராக பணிபுரிந்தபோது குற்றம் சாட்டப்பட்டவா்கள் பிணையில் செல்ல உதவியதாகவும், அதன்மூலம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாகவும் இதனால் அவா் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்றும் பாண்டியராஜன் என்பவா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இதையடுத்து சீதாராமன் மீது லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து மதுரை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாா் சீதாராமனிடம் விசாரணை நடத்தினா். மேலும் அவா் அரசு சிறப்பு வழக்குரைஞராக பதவியில் இருந்த 2017 முதல் 2020 டிசம்பா் வரை, வருவாய் மற்றும் செலவுக்கணக்குகளை ஆய்வு செய்தனா்.

இதில் அவா் பதவியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.27, 96,690 சோ்த்தது தெரியவந்தது. இதையடுத்து சீதாராமன் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT