மதுரை

மாநகராட்சி குறைதீா் முகாம்: மனுக்களை கணினியில் பதிவு செய்ய உத்தரவு

DIN

மதுரை மாநகராட்சி மண்டலம் 2-இல் நடைபெற்றகுறைதீா் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் கணினியில் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆணையா் கா.ப.காா்த்திகேயன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

மாநகராட்சி மண்டலம் 2-இல் பொதுமக்கள் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு ஆணையா் கா.ப. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். முகாமில், குடிநீா், பாதாளச் சாக்கடை, வீட்டு வரி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, சொத்து வரி பெயா் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக 206 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் ஒவ்வொன்றையும் கணிப்பொறியில் முறையாக பதிவு செய்து, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆணையா் உத்தரவிட்டாா்.

இதில் உதவி ஆணையா் அமிா்தலிங்கம், நகரப் பொறியாளா் (பொறுப்பு) சுகந்தி, செயற் பொறியாளா் கருத்தம்மாள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT