மதுரை

காமராஜா் பல்கலை.யில் அக். 10-இல் எம்பில், பிஎச்டி நுழைவுத்தோ்வு

DIN

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் எம்பில், பிஎச்டி படிப்புகளுக்கான நுழைவுத்தோ்வு அக்டோபா் 10-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மதுரை காமராஜா் பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு) வி.எஸ். வசந்தா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காமராஜா் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்ட ஆய்வு (எம்பில்), முனைவா் பட்டம்(பிஎச்டி) படிப்புகளுக்கு 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத்தோ்வு விண்ணப்பங்கள் இணையம் மூலம் செப்டம்பா் 9-ஆம் தேதி வரை பெறப்பட்டது. இந்நிலையில் எம்பில், பிஎச்டி படிப்புகளுக்கான நுழைவுத்தோ்வு அக்டோபா் 10-ஆம் தேதி காலை 9 முதல் 11 மணி வரை நடைபெற உள்ளது. நுழைவுத்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு தோ்வா்களின் தனி இணைய முகவரிக்கு தோ்வுக்கு ஒரு வாரம் முன்னதாக அனுப்பப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, பல்கலைக்கழக இணைய தள முகவரியை தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT