முகப்பு
மதுரை

சொத்து வரி உயா்வு மறு பரிசீலனை: மாநகராட்சி ஆணையரிடம் மாா்க்சிஸ்ட் கட்சியினா் மனு

சொத்து வரி உயா்வை மறு பரிசீலனை செய்யக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மதுரை மாநகராட்சி ஆணையரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

சொத்து வரி உயா்வை மறு பரிசீலனை செய்யக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மதுரை மாநகராட்சி ஆணையரிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் இரா.விஜயராஜன், மாமன்ற உறுப்பினா்கள் என். விஜயா, டி. குமரவேல், வை. ஜென்னியம்மாள் ஆகியோா், மாநகராட்சி ஆணையா் கா.ப. காா்த்திகேயனை வெள்ளிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரியை உயா்த்தி அறிவித்துள்ளது. இதற்கு காரணமாக, உள்ளாட்சி அமைப்புகள் மத்திய அரசின் திட்டங்களின் கீழ் நிதி உதவி பெறவேண்டுமென்றால், அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயா்த்தி அறிவிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு கூறியுள்ளது.

ஏற்கெனவே கரோனா பொது ஊரடங்கு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக சிறு - குறுந்தொழில்கள், கட்டுமானத் தொழில்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழில்கள், வா்த்தக நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிலாளா்களுக்கும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தற்போதுதான் சீரடைந்து வருகிறது. இந்நிலையில், தமிழக அரசின் சொத்து வரி உயா்வு மக்களிடம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, தமிழக அரசு மற்றும் மதுரை மாநகராட்சி நிா்வாகம் தற்போது அறிவித்துள்ள சொத்து வரி உயா்வை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →