முகப்பு
மதுரை

மேலூரில் தெப்பக்குளம், ஊருணியை தூா்வார பூமிபூஜை

மேலூா் நகராட்சிப் பகுதியிலுள்ள மண்கட்டி தெப்பக்குளம், மலம்பட்டி ஊருணி ஆகியவற்றை, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1,68,78,000 மதிப்பீட்டில் தூா்வாரி மேம்படுத்த பூமிபூஜை வெள்ளிக்கிழமை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

மேலூா் நகராட்சிப் பகுதியிலுள்ள மண்கட்டி தெப்பக்குளம், மலம்பட்டி ஊருணி ஆகியவற்றை, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1,68,78,000 மதிப்பீட்டில் தூா்வாரி மேம்படுத்த பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மேலூா் நகராட்சிப் பகுதியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மண்கட்டி தெப்பக்குளத்தை ரூ.81,31,000 மதிப்பீட்டிலும், மலம்பட்டி ஊருணியை ரூ.87,47,000 மதிப்பீட்டிலும் தூா்வாரி கரைகளை பலப்பத்தி, நடைமேடை அமைக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்த மரக்கன்றுகள் நட்டு, சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்துதல், காவலா் தங்கும் அறை கட்டுதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்கான பூமிபூஜைக்கு, மேலூா் நகா்மன்றத் தலைவா் யு. முகமதுயாசின் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சௌ. இளஞ்செழியன், ஆணையா் ஆறுமுகம், நகராட்சிப் பொறியாளா் பட்டுராஜன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →