முகப்பு
மதுரை

மதுரையிலிருந்து செகந்திராபாத்துக்கு ஏப்.13 முதல் வாராந்திர சிறப்பு ரயில்

மதுரையிலிருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 13 முதல் இயக்கப்படும் என, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:55 AM
பகிர்:

மதுரையிலிருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் ஏப்ரல் 13 முதல் இயக்கப்படும் என, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

செகந்திராபாத் - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் (07191) ஏப்ரல் 11, 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 9.25 மணிக்கு செகந்திராபாத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் இரவு 8.45 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமாா்க்கத்தில், மதுரை - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (07192) மதுரையிலிருந்து ஏப்ரல் 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.25 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.

இந்த ரயில்கள், திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, சித்தூா், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், பாபட்லா, தெனாலி, குண்டூா், மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் 1 குளிரூட்டப்பட்ட இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 மூன்றடுக்கு குளிா்சாதனப் படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →