முகப்பு
மதுரை

சித்திரைத் திருவிழா: மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

சித்திரைத் திருவிழாவையொட்டி மாசி வீதிகள் உள்ளிட்டப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

மதுரை

சித்திரைத் திருவிழா: மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

சித்திரைத் திருவிழாவையொட்டி மாசி வீதிகள் உள்ளிட்டப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

சித்திரைத் திருவிழாவையொட்டி மாசி வீதிகள் உள்ளிட்டப் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி: மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம், திருத்தேரோட்டம் ஆகிய நிகழ்வுகள் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்ச்சிகளை தரிசிக்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் பெருமளவில் வருவதை முன்னிட்டு மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ஆவணி வீதிகள், மாசி வீதிகள், வெளி வீதிகள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தை முன்னிட்டு வியாழக்கிழமை பகலில் லாரி, சிறிய வேன் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு கீழமாசி வீதி மற்றும் நான்கு ஆவணி மூல வீதிகளில் அனுமதி இல்லை. இதர மாசி வீதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்படும். தேரோட்டத்தையொட்டி வெள்ளிக்கிழமை பகலில் மாசி வீதிகள், கீழ மாரட் வீதி போன்றவற்றில் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. குறிப்பாக கீழ மாசி வீதியில் பகல் முழுவதும் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

வாகனங்கள் நிறுத்துமிடம்: மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தில் வாகன அனுமதி அட்டை இல்லாத இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கிழக்கு, தெற்கு மற்றும் வடக்குமாசி வீதிகளில் நிறுத்த வேண்டும். மஞ்சள் நிற அனுமதி அட்டை–உள்ள வாகனங்களை மேற்காவணி மூலவீதியிலும், பிங்க் நிற அனுமதி அட்டை–உள்ள வாகனங்களை வடக்காவணி மூலவீதியிலும், நீல நிற அனுமதிஅட்டை–உள்ள வாகனங்களை தெற்காவணி மூலவீதியிலும் நிறுத்த வேண்டும். திருத்தேரோட்டத்தையொட்டி வெள்ளிக்கிழமை(ஏப்ரல்15) கிழக்கு மாரட், மேல மாரட், தெற்கு மாரட், வடக்கு மாரட் ஆகிய வீதிகளில் ஒருபுறமாக வாகனங்களை நிறுத்த வேண்டும்.

கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளல்: கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில், அனுமதி அட்டை இல்லாத இரு மற்றும்

நான்கு சக்கர வாகனங்களை கீழ மாசி மற்றும் வடக்குமாசி வீதிகள், குருவிக்காரன்

சாலை, டாக்டா் தங்கராஜ் சாலை ஆகியவற்றில் நிறுத்த வேண்டும். பச்சை நிறஅனுமதி அட்டை–உள்ள வாகனங்கள் ஏ.வி.மேம்பாலம், நீல நிற அனுமதி அட்டை– வாகனங்கள் அண்ணா பேருந்து நிலையம் ஆகியவற்றிலும் நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →