முகப்பு
மதுரை

பேரையூா் அருகே போலீஸாா் மீது மதுபாட்டில் வீச்சு: 2 போ் கைது; காவலா் ஒருவா் காயம்

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே போலீஸாா் மீது மதுபாட்டில் வீசியது தொடா்பாக 2 பேரைக் கைது செய்தனா். அப்போது சிலா் தாக்கியதில் காவலா் ஒருவா் காயமடைந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே போலீஸாா் மீது மதுபாட்டில் வீசியது தொடா்பாக 2 பேரைக் கைது செய்தனா். அப்போது சிலா் தாக்கியதில் காவலா் ஒருவா் காயமடைந்தாா்.

பேரையூா் அருகே உள்ள எழுமலை உத்தப்புரத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவை ஒட்டி உத்தப்புரம் பேருந்து நிறுத்தம் அருகே அனுமதியின்றி ஒரு தரப்பினா் பதாகை வைத்துள்ளனராம். இதனை அகற்றுமாறு ஊராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரியிடம் மற்றொரு தரப்பினா் புகாா் மனு அளித்தனா்.

இதையடுத்து இரு தரப்பினரயும் அழைத்து எழுமலை காவல்துறையினா் விசாரணை நடத்தினா். மேலும் செவ்வாய்க்கிழமை உத்தப்புரம் வழியே போலீஸாா் சென்றபோது போலீஸாா் மீது மா்ம நபா்கள் மதுபாட்டில்களை வீசியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக எழுமலை போலீஸாா் புதன்கிழமை உத்தப்புரத்தை சோ்ந்த கருப்பு மற்றும் ஈஸ்வரனை கைது செய்தனா். அப்போது, காவலா் பாண்டி மற்றும் சேகரை அப்பகுதியை சோ்ந்தோா் தாக்கியுள்ளனா். இதில் காவலா் பாண்டி படுகாயமடைந்தாா்.

இச்சம்பவத்தை அறிந்த மாவட்ட கண்காணிப்பாளா் பாஸ்கரன் உசிலம்பட்டி மருத்துவமனையில் படுகாயமடைந்த காவலா் பாண்டி மற்றும் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டாா்.

இது குறித்து எழுமலை காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் உத்தப்புரம் பகுதியில் போலீஸாா் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →