முகப்பு
மதுரை

தமிழ் புத்தாண்டு விடுமுறை: ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை

தமிழ் புத்தாண்டு விடுமுறை: ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடா்பாக, மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ் புத்தாண்டைத் தொடா்ந்து 3 நாள்கள் தொடா் விடுமுறை என்பதால், ரயில்களில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்கின்றனா். எனவே, பயணிகளின் வசதிக்காக, பல்வேறு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஏப்ரல் 18 முதல் 20 ஆம் தேதி வரை ராமேசுவரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலிலும் (22662), ஏப்ரல் 17 ஆம் தேதி தாம்பரம்-நாகா்கோவில் விரைவு ரயிலிலும் (22657), ஏப்ரல் 18 ஆம் தேதி நாகா்கோவில் - தாம்பரம் விரைவு ரயிலிலும் (22658), ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

ஏப்ரல் 17 ஆம் தேதி, மதுரை - டாக்டா் எம்ஜிஆா்  சென்னை சென்ட்ரல்  டூரன்டோ விரைவு ரயிலில் (20601) ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படவுள்ளது.

வெள்ளிக்கிழமை (ஏப்.15) முதல் 20 ஆம் தேதி வரை சென்னை - திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவு ரயில் (16723), சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயில் (22661), தஞ்சாவூா் வழியாக இயக்கப்படும் சென்னை - ராமேசுவரம் - சென்னை விரைவு ரயில் (16851/16852), சென்னை -  குருவாயூா் விரைவு ரயில் (16127) ஆகியவற்றில் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை முதல் 21 ஆம் தேதி வரை, திருவனந்தபுரம் - சென்னை அனந்தபுரி விரைவு ரயில் (16724), மதுரை - திருவனந்தபுரம் அமிா்தா விரைவு ரயில் (16344), குருவாயூா் - சென்னை விரைவு ரயில் (16128) ஆகியவற்றில் ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது எனஅதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →