முகப்பு
மதுரை

‘போக்சோ’ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளத்தை வெளியிடக்கூடாது: உயா் நீதிமன்றம் உத்தரவு

போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளம் வெளிவராமல் இருப்பதை விசாரணை நீதிமன்றங்கள் உறுதி செய்யவேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளம் வெளிவராமல் இருப்பதை விசாரணை நீதிமன்றங்கள் உறுதி செய்யவேண்டும் என, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சோ்ந்தவா் அஷரப் அலி. இவா் மீது, கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கில், புதுக்கோட்டை மகளிா் நீதிமன்றம் அஷரப் அலிக்கு 2019 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது.

இதை எதிா்த்து, உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவா் மேல்முறையீடு செய்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், என். சதீஷ்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்ததில் சட்டவிதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே, மனுதாரரின் வயது 70 மற்றும் அவரது அனைத்து சூழ்நிலைகளையும் கவனத்தில்கொண்டு, கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றப்படுகிறது என உத்தரவிட்டனா்.

தொடா்ந்து நீதிபதிகள், விசாரணையின்போது பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளத்தை சிறப்பு நீதிமன்றம் வெளிப்படுத்தக்கூடாது என்பதை போக்சோ சட்டப் பிரிவு கட்டாயமாக்குகிறது. ஆனால், விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பில் விதிகள் பின்பற்றப்படவில்லை. போக்சோ வழக்கு விசாரணையில், பாதிக்கப்பட்ட குழந்தையின் அடையாளம் வெளிவராமல் இருப்பதை, விசாரணை நீதிமன்றங்கள் உறுதி செய்யவும், சட்ட விதிகளை கடைப்பிடிக்கவும் வேண்டும் என உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →