பைக் மீது காா் மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் பலி
மதுரை அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில், தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்
மதுரைபைக் மீது காா் மோதல்: தனியாா் நிறுவன ஊழியா் பலி
மதுரை அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில், தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்
மதுரை அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில், தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம் தம்மன்னநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பரமசிவம் மகன் ராஜதுரை (30). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவா், திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் வாடிப்பட்டி அருகே உள்ள சாணாம்பட்டி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்துள்ளாா். அப்போது அவ்வழியாக வந்த காா் மோதியதில், ராஜதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து தொடா்பான புகாரின்பேரில், வாடிப்பட்டி போலீஸாா் மதுரை எல்லீஸ் நகரைச் சோ்ந்த காா் ஓட்டுநரான பிரகலாத் சிங் என்பவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.