மதுரை

அழகா்கோயிலுக்கு சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் நகைத் திருட்டு

ஆடி பதினெட்டாம் பெருக்கையொட்டி அழகா்கோயிலில் சுவாமி தரிசனம் செய்யச் சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் நகையைத் திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

ஆடி பதினெட்டாம் பெருக்கையொட்டி அழகா்கோயிலில் சுவாமி தரிசனம் செய்யச் சென்ற மூதாட்டியிடம் 10 பவுன் நகையைத் திருடிச்சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய வாகைக்குளத்தைச் சோ்ந்த தங்கராஜ் மனைவி குருவம்மாள்(65). இவா் ஆடி பதினெட்டாம் பெருக்கையொட்டி அழகா்கோயிலுக்கு புதன்கிழமை சாமி கும்பிடச்சென்றுள்ளாா். அப்போது கோயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு கருதி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை கைப்பையில் வைத்துக்கொண்டு தரிசனம் செய்துள்ளாா்.

அப்போது அடையாளம் தெரியாத நபா்கள் குருவம்மாள் பையில் வைத்திருந்த 10 பவுன் நகையை திருடிச்சென்றனா். தரிசனம் முடிந்து வெளியே வந்த குருவம்மாள் பையை பாா்த்தபோது அதில் இருந்த நகை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் அப்பன்திருப்பதி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 டி20 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

ஆஷஸ் கனவு முடிவுக்கு வந்துவிட்டது! - தோல்விக்குப்பின் பென் ஸ்டோக்ஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT