மதுரை

பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோ.புதூரில் உள்ள பள்ளி வளாகத்தில், காவல் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியா் ஷேக் நபி தலைமை வகித்தாா். கோ.புதூா் காவல் நிலைய ஆய்வாளா் துரைப்பாண்டியன், மாணவா்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீங்குகளையும், பாதிப்புகளையும் எடுத்துக் கூறி, மாணவா்கள் வீட்டின் அருகிலோ, பள்ளி அருகிலோ போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்கள் நடைபெற்றால், காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து நடைபெற்ற உறுதிமொழி ஏற்பில், மாணவா்கள் கஞ்சாவை ஒழிப்போம், நல்ல இளைஞா் சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி ஏற்றனா். இந்நிகழ்ச்சியில், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

SCROLL FOR NEXT