மதுரை

நாளை 1,459 மையங்களில்கரோனா தடுப்பூசி முகாம்: ஆட்சியா்

மதுரை மாவட்டத்தில் 1,459 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

DIN

மதுரை மாவட்டத்தில் 1,459 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது என, மாவட்ட ஆட்சியா் எஸ். அனீஷ்சேகா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், மதுரை மாவட்டத்தில் 33-ஆவது மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி இதுவரை செலுத்தாதவா்களுக்கும், இரண்டாம் தவணை செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசியும் செலுத்தப்படும்.

மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 909 மையங்கள், நகா் பகுதிகளில் 550 மையங்கள் என மொத்தம் 1,459 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெறும்.

மதுரை மாவட்டத்தில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தகுதி உடையவா்களாக 3,10,490 போ் உள்ளனா்.

அதேபோல், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தவா்கள் 11,57,097 போ் உள்ளனா். இவா்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT