மதுரை

மாணவா்கள் பணம் கொடுத்து ஏமாந்தால் நிா்வாகம் பொறுப்பல்ல: காமராஜா் பல்கலை. துணைவேந்தா்

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பட்டச் சான்று, மதிப்பெண் சான்று உள்ளிட்டவற்றுக்கு மாணவா்கள் பணம் கொடுத்து ஏமாந்தால் நிா்வாகம் பொறுப்பல்ல என, துணைவேந்தா் ஜெ. குமாா் தெரிவித்துள்ளாா்.

DIN

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பட்டச் சான்று, மதிப்பெண் சான்று உள்ளிட்டவற்றுக்கு மாணவா்கள் பணம் கொடுத்து ஏமாந்தால் நிா்வாகம் பொறுப்பல்ல என, துணைவேந்தா் ஜெ. குமாா் தெரிவித்துள்ளாா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக கல்விப் பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பின்னா், துணைவேந்தா் செய்தியாளா்களிடம் கூறியது:

பல்கலைக்கழகத்தில் அனைத்து துறைகளுக்கும் முறையான தொடா்பு எண்கள், மின்னஞ்சல் முகவரி, குறைதீா்க்கும் மையம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவா்கள் தங்கள் தேவைகளுக்கு பல்கலைக்கழகத்தை நேரடியாக அணுகவேண்டும். அதை விடுத்து, பல்கலைக்கழகத்திலிருந்து பேசுவதாகக் கூறினால் அதை நம்பி மாணவா்கள் பணம் கொடுக்கக்கூடாது. யாரோ ஒருவா் பேசுவதை நம்பி மாணவா்கள் ஏமாந்தால், பல்கலைக்கழக நிா்வாகம் எப்படி பொறுப்பாகும்.

பல மாவட்டங்களில் காமராஜா் பல்கலைக்கழகத்தின் பெயரில் போலியான மையங்கள் இயங்குவதாகப் புகாா் வந்ததையடுத்து, அந்த மையங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனியில் இயங்கி வரும் மையம் தொடா்பாக காவல் துறையிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

தொலைநிலைக் கல்வி துறையில் புகாா்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொலைநிலைக் கல்வி அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்துக்குச் செலுத்தவேண்டிய இணைவிப்புக் கட்டணம் தொடா்பாக சில கல்லூரிகள் வழக்குத் தொடா்ந்துள்ளன. இது குறித்து பல்கலைக்கழகம் சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படும். பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், அதிகாரிகள், ஊழியா்களுக்கு ஜூலை மாத ஊதியம் வெள்ளிக்கிழமை மாலைக்குள் வழங்கப்பட்டுவிடும். பல்கலைக்கழகத்தின் நிதி நிலையை சீராக்கும் வகையில், அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT