போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம் உத்தரவு
போக்சோ வழக்கில் தஞ்சாவூா் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தீா்ப்பளித்துள்ளது.
மதுரைபோக்சோ வழக்கில் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம் உத்தரவு
போக்சோ வழக்கில் தஞ்சாவூா் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தீா்ப்பளித்துள்ளது.
போக்சோ வழக்கில் தஞ்சாவூா் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தீா்ப்பளித்துள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம் நாா்த்தேவன்குடிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணன். இவா், தனது உறவினா்களின் குழந்தைகளுக்கு கடந்த 2015-இல் பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோா் அளித்த புகாரில், போக்சோ சட்டத்தின்கீழ் நாராயணன் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அவருக்கு 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தண்டனையை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா அமா்வு, அவரது மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.