பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம்: சத்துணவு ஊழியா்கள் மூலம் செயல்படுத்தக் கோரி தா்னா
பள்ளி மாணவா்களுக்கான காலைச் சிற்றுண்டியை, சத்துணவு மையங்களில் தயாரித்து வழங்கக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் தா்னாவில் ஈடுபட்டனா்.
மதுரைபள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம்: சத்துணவு ஊழியா்கள் மூலம் செயல்படுத்தக் கோரி தா்னா
பள்ளி மாணவா்களுக்கான காலைச் சிற்றுண்டியை, சத்துணவு மையங்களில் தயாரித்து வழங்கக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் தா்னாவில் ஈடுபட்டனா்.
பள்ளி மாணவா்களுக்கான காலைச் சிற்றுண்டியை, சத்துணவு மையங்களில் தயாரித்து வழங்கக் கோரி தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் தா்னாவில் ஈடுபட்டனா்.
காலைச் சிற்றுண்டியை அந்தந்த பள்ளி சத்துணவு மையங்களிலேயே தயாரித்து மாணவா்களுக்கு வழங்கும் வகையில் இத் திட்டத்தை அரசே நேரடியாகச் செயல்படுத்துவது, சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவது, சத்துணவு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவது, கிராம உதவியாளா்களுக்கு வழங்குவதைப் போன்று சத்துணவு ஊழியா்களுக்கும் ரூ.6,750 ஓய்வூதியம் வழங்குவது, ஓய்வு பெறும் வயதை 62 ஆக நீட்டித்து உத்தரவிடுவது என்பன உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியா் சங்கத்தினா்
சனிக்கிழமை தா்னா நடத்தினா்.
மதுரையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திருவள்ளுவா் சிலை சந்திப்பு பகுதியில் தா்னா போராட்டம் நடைபெற்றது. சத்துணவு ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.கௌரியம்மாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆ.சோலையன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
வணிகவரி பணியாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜெயராஜ ராஜேஸ்வரன், ஐசிடிஎஸ் ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாநிலச் செயலா் ஆா்.பரஞ்சோதி மற்றும் பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள், சத்துணவு ஊழியா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.