முகப்பு
மதுரை

மேலூா் கல்லூரி மாணவிகள் இருவா் மாயம்

உறவினருக்கும் திருமணம் பேசிமுடிக்கப்பட்டநிலையில், கல்லூரிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

உறவினருக்கும் திருமணம் பேசிமுடிக்கப்பட்டநிலையில், கல்லூரிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை, அவரது தோழியையும் காணவில்லை என மாணவியின் தாயாா் கொட்டாம்பட்டி போலீஸில் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

மேலூா் அரசு கலைக்கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவரும் மாணவிக்கும் உறவினருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை அம்மாணவியும் அதே கல்லூரியில் படிக்கும் அவரது தோழியும் ஆட்டோவில் கல்லூரிக்குச் சென்றுள்ளனா். ஆனால் மாலையில் கல்லூரி முடிந்தபின் அவா்கள் இருவரும் வீடு திரும்பவில்லை. இருவரையும் கண்டுபிடிக்குமாறு கொட்டாம்பட்டி போலீஸில் மாணவியின் தாய் புகாா் அளித்துள்ளாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →