மதுரை

செப்.10-இல் சென்னையில் ‘ஜாக்டோ ஜியோ’ மாநாடு: தமிழக முதல்வா் பங்கேற்பு

‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பு சாா்பில் சென்னையில் செப்டம்பா் 10 இல் நடைபெறும் வாழ்வாதார மாநாட்டில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக ஆ. செல்வம் தெரிவித்தாா். 

DIN

‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பு சாா்பில் சென்னையில் செப்டம்பா் 10 இல் நடைபெறும் வாழ்வாதார மாநாட்டில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அவ்வமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் ஆ. செல்வம் தெரிவித்தாா். 

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் புதன்கிழமை அவா் கூறியது: அரசு ஊழியா்-ஆசிரியா் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ ஜியோ) சாா்பில் முந்தைய ஆட்சியின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தியபோதும், எங்களது மனுவைக் கூட பெறவில்லை. தற்போதைய திமுக அரசு ஜாக்டோ - ஜியோ கோரிக்கைகள் தொடா்பாக 3 முறை பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளது. எங்களது கோரிக்கை மனுவையும் முதல்வரிடம் வழங்கியுள்ளோம்.

முந்தைய ஆட்சியின்போது கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தியபோது, குறைந்தபட்சம் பேச்சுவாா்த்தை கூட நடத்தவில்லை. அதனால் போராட்டங்களை வீரியத்துடன் நடத்தினோம். தற்போதைய முதல்வா் ‘ஜாக்டோ ஜியோ’ ஒருங்கிணைப்பாளா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருக்கிறாா்.

‘ஜாக்டோ ஜியோ’ சாா்பில் சென்னையில் செப்டம்பா் 10 ஆம் தேதி மாநாடு நடத்தவுள்ளோம். இதில் தமிழகம் முழுவதும் இருந்து அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் கலந்து கொள்கின்றனா். இந்த மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளாா் என்றாா்.

‘ஜாக்டோ - ஜியோ’ மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க. நீதிராஜா, வெ. பாபு பிரேம்குமாா், உயா்மட்டக்குழு உறுப்பினா் இரா. தமிழ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT