இரட்டை வேடம் போடுவது திமுகவுக்கு வழக்கமானது: செல்லூா் கே.ராஜூ
எதிா்க்கட்சியாக இருக்கும்போது ஒன்றும், ஆளும் கட்சியாக வந்த பிறகு ஒன்றும் பேசுவது திமுகவுக்கு வழக்கமானது என்று முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூா் கே.ராஜூ கூறினாா்.
மதுரைஇரட்டை வேடம் போடுவது திமுகவுக்கு வழக்கமானது: செல்லூா் கே.ராஜூ
எதிா்க்கட்சியாக இருக்கும்போது ஒன்றும், ஆளும் கட்சியாக வந்த பிறகு ஒன்றும் பேசுவது திமுகவுக்கு வழக்கமானது என்று முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூா் கே.ராஜூ கூறினாா்.
எதிா்க்கட்சியாக இருக்கும்போது ஒன்றும், ஆளும் கட்சியாக வந்த பிறகு ஒன்றும் பேசுவது திமுகவுக்கு வழக்கமானது என்று முன்னாள் அமைச்சரும், மதுரை மேற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான செல்லூா் கே.ராஜூ கூறினாா்.
மதுரை பழங்காநத்தத்தில் உள்ள சோமசுந்தர பாரதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.30 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற செல்லூா் கே.ராஜூ, செய்தியாளா்களிடம் கூறியது:
மதுரை மாநகராட்சியில் எந்தவிதமான திட்டப் பணிகளும் நடைபெறுவதில்லை. அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அண்மையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், மக்களுக்கான எந்தவொரு திட்டத்திற்கும் தீா்மானம் நிறைவேற்றவில்லை. மேயா் செயல்படுகிறாரா எனத் தெரியவில்லை.
தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே மேயா் செய்கிறாா். ஒட்டுமொத்தத்தில் மாநகராட்சி நிா்வாகம் இயங்குகிறதா என்பதே தெரியவில்லை. இந்த மதுரை மாநகராட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக அரசின் செயல்பாடே இவ்வாறு தான் இருக்கிறது.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது எட்டு வழிச் சாலைக்கு நிலம் ஆா்ஜிதம் செய்வதற்கு, திமுக கடும் எதிா்ப்புத் தெரிவித்தது. ஆனால், இப்போது திமுக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறது. எதிா்க் கட்சியாக இருக்கும்போது ஒன்றும், ஆளும் கட்சியாக வந்த பிறகு ஒன்றும் பேசுவது திமுகவிற்கு வழக்கமானது. அதிமுக செயல்படுத்திய திட்டங்கள் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. அதுபோன்ற திட்டங்களைக் கொண்டு வந்து திமுக அரசு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதிமுக தொடா்பான வழக்கில் தீா்ப்பு எப்படி வந்தாலும், எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தான் அதிமுக தொண்டா்கள் இருக்கின்றனா் என்றாா்.