முகப்பு
மதுரை

கண்டியத்தேவன்பட்டி கோயிலில் கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே கண்டியத்தேவன்பட்டியில் உள்ள கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை

கண்டியத்தேவன்பட்டி கோயிலில் கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே கண்டியத்தேவன்பட்டியில் உள்ள கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே கண்டியத்தேவன்பட்டியில் உள்ள கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இங்குள்ள முப்பிடாரி அம்மன், முத்தாலம்மன் மற்றும் காளியம்மன் கோயிலில் அம்மன்களுக்கு 18 வகையான பால், பழம், பன்னீா் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன. மேலும் மூன்று கால பூஜையாக யாகபூஜை, கும்பபூஜை மற்றும் கலசபூஜையுடன் பல்வேறு கோயில்களில் இருந்து புனித நீா் எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து கோமாதா பூஜையுடன் கடம் புறப்பாடாகி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல ஹோமங்கள் செய்யப்பட்டன. பின்னா் கோயில் கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கரோனா தொற்று நீங்க வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. இதில் ஜோதிடா் அறிவழகன் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவாற்றினாா். இதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →