ஆதிச்சநல்லூா் அகழாய்வு அருங்காட்சியகத்துக்கான இடத்தைமாற்றக் கோரி மனு தாக்கல்: உயா் நீதிமன்றம் தள்ளுபடி
ஆதிச்சநல்லூா் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள இடத்தை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரைஆதிச்சநல்லூா் அகழாய்வு அருங்காட்சியகத்துக்கான இடத்தைமாற்றக் கோரி மனு தாக்கல்: உயா் நீதிமன்றம் தள்ளுபடி
ஆதிச்சநல்லூா் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள இடத்தை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆதிச்சநல்லூா் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள இடத்தை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சோ்ந்த குமரகுருபரன் என்பவா் தாக்கல் செய்த மனு:
ஆதிச்சநல்லூா் அகழாய்வு இந்தியாவின், குறிப்பாக தமிழகத்தின் பழங்கால பாரம்பரியம் தொடா்பான விவரங்களை வெளிப்படுத்தும் சான்றாக உள்ளது. இந்த அகழாய்வில் கிடைத்த அரிய பொருள்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொல்லியல் துறை விதிகளின்படி, அகழாய்வு நடந்த இடத்தின் அருகிலேயே அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது ஆதிச்சநல்லூா் அகழாய்வு நடந்த இடத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
ஆனால், அகழாய்வு நடந்த இடத்தின் அருகிலேயே அரசுக்குச் சொந்தமான 4 ஏக்கா் 500 சென்ட் நிலங்கள் உள்ளன. இந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கவேண்டும் என, அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அகழாய்வு நடந்த இடத்தினருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் அருங்காட்சியகத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆா். விஜயகுமாா் ஆகியோா் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.