முகப்பு
மதுரை

விதிகளை மீறிய 200 ஆட்டோக்களுக்கு அபராதம்

மதுரையில் விதிகளை மீறிய 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு போக்குவரத்து போலீஸாா் ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா்

மதுரை

விதிகளை மீறிய 200 ஆட்டோக்களுக்கு அபராதம்

மதுரையில் விதிகளை மீறிய 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு போக்குவரத்து போலீஸாா் ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

மதுரையில் விதிகளை மீறிய 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு போக்குவரத்து போலீஸாா் ரூ.80 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா்.

மதுரை நகரில் விபத்துக்களைத் தடுக்கும் வகையில் விதிகளை மீறும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநகரப் போக்குவரத்து காவல் துணை ஆணையா் ஆறுமுகசாமி உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து மதுரை நகா் முழுவதும் முக்கிய ச்சாலைகளில் போக்குவரத்து போலீஸாா் தீவிரக்கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இதில் ஒருவழிப் பாதையில் செல்லும் வாகனங்களுக்கு, குறிப்பாக ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதில் வியாழக்கிழமை ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் உள்பட 600-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு விதிமீறலுக்காக ரூ.80 ஆயிரம்வரை அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்களின் ஓட்டுநா்களுக்கு போக்குவரத்து போலீஸாா் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →