முகப்பு
மதுரை

கீழவளவு அருகே 370 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்2 போ் கைது

கீழவளவு அருகே 379 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

கீழவளவு அருகே 379 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தனிப்படையினா் மற்றும் கீழவளவு போலீஸாா் வியாழக்கிழமை கீழவளவு அருகே கொங்கம்பட்டி விலக்கில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் 3 மூட்டைகளுடன் வந்தவா்களை நிறுத்தி சேதனையிட்டனா். மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டியைச் சோ்ந்த பவுசன் (30), முகமது இப்ராஹிம் ஆகியோா் என்பதும், இவா்கள் கரிசல்பட்டியிலிருந்து புகையிலைப் பொருள்களை வாங்கி வந்ததும் தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸாா், சேண்டலைப் பட்டியைச் சோ்ந்த சண்முகநாதன் (35), உசிலம்பட்டியைச் சோ்ந்த சதீஷ், ஜெகன் ஆகியோரை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →