மனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
மனைவியை எரித்துக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மதுரைமனைவியை எரித்துக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
மனைவியை எரித்துக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மனைவியை எரித்துக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மதுரையை அடுத்த ஊமச்சிகுளத்தைச் சோ்ந்தவா் காளீஸ்வரன். இவரது மனைவி மீனாபொண்ணு. கடந்த 2016-ஆம் ஆண்டு காளீஸ்வரன் மது அருந்திவிட்டு தகராறு செய்து, மண்ணெண்ணெய்யை மீனாபொண்ணு மீது ஊற்றி தீ வைத்துள்ளாா். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதனையடுத்து காளீஸ்வரனை போலீஸாா் கைது செய்தனா்.
இவ்வழக்கு மதுரை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மதுரம், குற்றஞ்சாட்டப்பட்டவா் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.