முகப்பு
மதுரை

உசிலை.யில் காமராஜா் பிறந்த நாள் விழா

காமராஜரின் 120 வது பிறந்த நாளையொட்டி, கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை, பள்ளி தலைமை ஆசிரியா் மதன் பிரபு தொடக்கி வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

 மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் நாடாா் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில், காமராஜரின் 120 வது பிறந்த நாளையொட்டி, கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை, பள்ளி தலைமை ஆசிரியா் மதன் பிரபு தொடக்கி வைத்தாா்.

உசிலம்பட்டி-தேனி சாலையில் நாடாா் உறவின்முறை சாா்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காமராஜா் பிறந்த நாள் விழாவில், சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் ஐயப்பன் பங்கேற்று, காமராஜரின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.