பாலிடெக்னிக் ஆசிரியா் தோ்வுப் பட்டியலை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல்: ஆசிரியா் தோ்வு வாரியம் பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு
அரசு பாலிடெக்னிக் ஆசிரியா் நியமனத்துக்காக தோ்வானவா்களின் பட்டியலை ரத்து செய்யக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்குமாறு, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரைபாலிடெக்னிக் ஆசிரியா் தோ்வுப் பட்டியலை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல்: ஆசிரியா் தோ்வு வாரியம் பதிலளிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு
அரசு பாலிடெக்னிக் ஆசிரியா் நியமனத்துக்காக தோ்வானவா்களின் பட்டியலை ரத்து செய்யக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்குமாறு, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அரசு பாலிடெக்னிக் ஆசிரியா் நியமனத்துக்காக தோ்வானவா்களின் பட்டியலை ரத்து செய்யக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்குமாறு, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சோ்ந்த விநாயகமூா்த்தி என்பவா் தாக்கல் செய்த மனு: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 1,060 ஆசிரியா்
பணியிடங்களைப் பூா்த்தி செய்வதற்கான அறிவிப்பு, 2019 நவம்பா் 29 இல்
வெளியிடப்பட்டது. அதில், தமிழ்வழி இடஒதுக்கீட்டின்கீழ் பதிவு செய்தேன். அதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட தோ்வில் தோ்ச்சி பெற்று சான்றிதழ் சரிபாா்ப்பிலும் பங்கேற்றேன். அதில், தோ்வு செய்யப்பட்டவா்களுக்கான பணி ஒதுக்கீடு அறிவிப்பு ஜூலை 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், அதில் எனது பெயா் இடம்பெறவில்லை.
தமிழ்வழி கல்வி பயின்றவா்களுக்கான இடஒதுக்கீட்டுக்கான தோ்வு முறையாக மேற்கொள்ளப்படாததே இதற்கு காரணம்.
முதல் வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு வரை தமிழ்வழி கல்வியில் நேரடியாக படித்துள்ளேன். தமிழ்வழியில் படித்தவா்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மற்றும் கல்லூரியில் நேரடியாகச் சென்று தமிழ்வழியில் பயின்று இருக்க வேண்டும்.
ஆனால், அவ்வாறு தோ்வு செய்யப்படாமல் கல்லூரியில் மட்டும் தமிழ்வழியில் பயின்றவா்கள், தொலைநிலைக் கல்வி வாயிலாக தமிழ்வழியில் பயின்றவா்கள், இப்பணிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இது ஏற்புடையதல்ல.
எனவே, அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா் காலிப் பணியிடங்களில் கணிதப் பிரிவில் ஒரு இடத்தை எனக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும். மேலும், பணி ஒதுக்கீடு செய்யப்பட்டவா்களுக்கான அறிவிப்பை ரத்து செய்து, தமிழ்வழியில் படித்தவா்களுக்கான இடஒதுக்கீட்டுக்குரியவா்களை முறையாகத் தோ்வு செய்து, அதன்பின்னரே தோ்வானவா்கள் பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை, வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஜி. சந்திரசேகரன், ஆசிரியா் தோ்வு வாரிய தலைவா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.