மதுரை

தற்காலிக ஆசிரியா்கள் நியமனத்துக்கு தடை கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்புக்கு தடை கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

DIN

அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்புக்கு தடை கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியா் நியமனத்துக்காக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சோ்ந்த பா்வதம் என்பவா், சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்காலிகமாக ஆசிரியா்களை நியமனம் செய்வது குறித்து அரசுக்கு பல்வேறு கேள்விகளை நீதிபதி எழுப்பியிருந்தாா்.

இதைத்தொடா்ந்து இந்த மனு மீண்டும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜூலை 21) ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT