மதுரை

பாஜக பாதயாத்திரைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க உயா் நீதிமன்றம் உத்தரவு

விருதுநகா் மாவட்டத்தில் பாஜக நடத்தவுள்ள பாதயாத்திரைக்கு, நிபந்தனைகளுடன் சட்டத்துக்குள்பட்டு அனுமதி வழங்குமாறு காவல் துறைக்கு, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

DIN

விருதுநகா் மாவட்டத்தில் பாஜக நடத்தவுள்ள பாதயாத்திரைக்கு, நிபந்தனைகளுடன் சட்டத்துக்குள்பட்டு அனுமதி வழங்குமாறு காவல் துறைக்கு, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரை சோ்ந்த சாந்தகுமாா் என்பவா் தாக்கல் செய்த மனு: விருதுநகா் மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து பல ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஜவுளி பூங்காவை அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்யாமல் தமிழக அரசு கிடப்பில் வைத்துள்ளது.

ஜவுளி பூங்கா அமைப்பது தொடா்பாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, பாஜக சாா்பில் ஜூலை 23 ஆம் தேதி பாதயாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே,திருத்தங்கல் முதல் விருதுநகா் ஆட்சியா் அலுவலகம் வரை பாதயாத்திரையாகச் செல்ல அனுமதி வழங்குமாறு உத்தரவிடவேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. சிவஞானம், மனுதாரா் சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புதிய மனு அளிக்கவேண்டும். அதனடிப்படையில், நிபந்தனைகளுடன் சட்டத்துக்குள்பட்டு அனுமதி அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT