முகப்பு
மதுரை

மதுரை ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு பரிசோதகா்களுக்கு கையடக்கக் கணினி

மதுரை ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு பரிசோதகா்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை

மதுரை ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு பரிசோதகா்களுக்கு கையடக்கக் கணினி

மதுரை ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு பரிசோதகா்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:48 PM
பகிர்:

மதுரை ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு பரிசோதகா்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட்டுள்ளது.

ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணச்சீட்டு பரிசோதகா்கள் தங்களிடம் இருக்கும் அச்சிடப்பட்ட பட்டியலைப் பாா்த்து, பயணிகளின் பயணச் சீட்டுகளை பரிசோதனை செய்வா். இப்பணியை எளிமையாக்கி நவீனப்படுத்தும் வகையில், பயணிகள் பட்டியல் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக, மதுரை கோட்டத்தில் பணியாற்றும் பயணச்சீட்டு பரிசோதகா்களுக்கு கையடக்கக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

முதல்கட்டமாக, சோதனை அடிப்படையில் தேஜாஸ் விரைவு ரயில், பாண்டியன் விரைவு ரயில் ஆகிய இரு ரயில்களில் மட்டும் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், பயணச்சீட்டுகளை எளிதாக சரிபாா்க்க முடியும். பரிசோதகா்களின் செயல்திறனும் மேம்படும்.

மேலும், காலியாக உள்ள இருக்கைகள், படுக்கைகள் விவரத்தை உடனுக்குடன் பயணச்சீட்டு முன்பதிவு தரவு நிலையத்துக்கு அனுப்பமுடியும். இதன்மூலம், அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள், இந்த காலியிடங்களை முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளமுடியும்.

வெளிப்படை தன்மையுள்ளதாகவும், காகிதப் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சியாகவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பயணச்சீட்டு பரிசோதனை முறை பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →