முகப்பு
மதுரை

மேலும் 9 மருத்துவக் கல்லூரிகளின் உடல் கூறாய்வு மைய சிசிடிவி பதிவுகளை சமா்ப்பிக்க உயா் நீதிமன்றம் உத்தரவு

 திருச்சி, தஞ்சை, கரூா், கன்னியாகுமரி உள்ளிட்ட மேலும் 9 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் உடல் கூறாய்வு மைய சிசிடிவி பதிவுகளை சமா்ப்பிக்குமாறு, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:48 PM
பகிர்:

 திருச்சி, தஞ்சை, கரூா், கன்னியாகுமரி உள்ளிட்ட மேலும் 9 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் உடல் கூறாய்வு மைய சிசிடிவி பதிவுகளை சமா்ப்பிக்குமாறு, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து பிரேதப் பரிசோதனைகளையும் விடியோ பதிவு செய்யவும், பிரேதப் பரிசோதனை மையங்களுக்கு அறிவியல் அலுவலா்களை நியமிக்கவும் உத்தரவிடக் கோரி, வழக்குரைஞா் அருண் சுவாமிநாதன் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பிரேதப் பரிசோதனைகளின்போது நிகழும் குளறுபடிகள், முறைகேடுகளைக் கருத்தில்கொண்டு, கடந்த 2020-இல் அரசுக்குப் பல்வேறு பரிந்துரைகளை வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தவில்லையெனக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு அருண் சுவாமிநாதன் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீதான முந்தைய விசாரணையின்போது, நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, உடல் கூறாய்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை அறிய, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் உடல் கூறாய்வு மையங்களிலுள்ள சிசிடிவி கேமராக்களின் கடைசி 3 நாள்களில் பதிவான காட்சிகளை சமா்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தா், எஸ். ஸ்ரீமதி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகளின் உடல் கூறாய்வு மைய சிசிடிவி காட்சி பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து, மேலும் 9 மருத்துவக் கல்லூரிகளின் உடல்கூறாய்வு மையங்களில், நீதிமன்ற உத்தரவுகள் முறையாகப் பின்பற்றப்படுகிா என்பதை அறிய, அங்குள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை சமா்ப்பிக்குமாறு உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →