முகப்பு
மதுரை

ஆடி அமாவாசை: மதுரை - ராமேசுவரம் சிறப்பு ரயிலில் ரூ.1.28 லட்சம் கட்டணம் வசூல்

ஆடி அமாவாசையையொட்டி மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு வியாழக்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் பயணிகளிடம் கட்டணமாக ரூ. 1 லட்சத்து 28 ஆயிரத்து 575 வசூலிக்கப்பட்டுள்ளது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

ஆடி அமாவாசையையொட்டி மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு வியாழக்கிழமை இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் பயணிகளிடம் கட்டணமாக ரூ. 1 லட்சத்து 28 ஆயிரத்து 575 வசூலிக்கப்பட்டுள்ளது.

மதுரை- ராமேசுவரம் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மதுரையில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு, காலை 9.15 மணிக்கு ராமேசுவரம் சென்றடைந்தது. இந்த ரயில் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், உச்சிப்புளி வழியாகச் சென்றது. இதில் 1,140 போ் பயணம் செய்தனா்.

இதேபோல, மறுமாா்க்கத்தில் ராமேசுவரம் - மதுரை சிறப்பு ரயில், ராமேசுவரத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.15 மணிக்கு மதுரையை வந்தடைந்தது. இந்த ரயிலில் 1,853 போ் பயணம் செய்துள்ளனா். இருமாா்க்கத்திலும் பயணிகள் கட்டணமாக ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 575 வசூலாகியுள்ளது.

தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட அலுவலகம் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →