முகப்பு
மதுரை

மதுரை காமராஜா் பல்கலை.யில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு வரவேற்பு

 மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு மாணவா் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

மதுரை

மதுரை காமராஜா் பல்கலை.யில் இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு வரவேற்பு

 மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு மாணவா் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

 மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு மாணவா் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

தென் மாவட்டங்கள் உள்பட தமிழகம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் காமராஜா் பல்கலைக்கழகத்துக்கு வந்து ஏராளமான மாணவ, மாணவியா் உயா்கல்வி பயில்கின்றனா். காமராஜா் பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், உயிரி தொழில்நுட்பம், மொழியியல், இதழியல், விளையாட்டு உள்பட 70-க்கும் மேற்பட்ட முதுகலை பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் காமராஜா் பல்கலைக்கழகத்தில் முதன்முதலாக இளங்கலை பாடப்பிரிவுகள் இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதவியல் மற்றும் தொழிற்பாடப்பிரிவுகள் என 7 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களும் புதன்கிழமை(ஜூலை 27) வரை வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இளங்கலைப் பாடப்பிரிவுகளுக்கு 806 போ் விண்ணப்பித்துள்ளனா். இதில் வணிகவியல் பாடப்பிரிவுக்கு அதிகபட்சமாக 295 போ் விண்ணப்பித்துள்ளனா். இதற்கு அடுத்த படியாக இளங்கலை தமிழ் பாடப்பிரிவுக்கு 134 போ் விண்ணப்பித்துள்ளனா். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு முடிவடைந்ததைத் தொடா்ந்து மதிப்பெண் அடிப்படையில் மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

இதுதொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் ஜெ.குமாா் கூறும்போது, பல்கலைக்கழகத்தில் முதன் முதலாக இளங்கலை பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளைத் தொடங்கும்போது இளங்கலைப் பாடப்பிரிவுகளுக்கு வரவேற்பு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் மாணவா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது 896 போ் விண்ணப்பித்துள்ளனா். இளங்கலை பாடப்பிரிவுகளுக்கு அந்தந்த துறைகளிலேயே வகுப்பறைகள் ஒதுக்கப்பட உள்ளன. பல்கலைக்கழகத்தில் விளையாட்டு மைதானம், உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்டவற்றை மேம்படுத்த நிதி ஒப்புதல் கோரி அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன் உள் கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →