முகப்பு
மதுரை

பெண்ணை கால்வாயில் மூழ்கடித்துக் கொன்றவருக்கு ஆயுள்தண்டனை உறுதி

பாலியல் பலாத்கார முயற்சியின்போது பெண்ணைக் கால்வாயில் மூழ்கடித்துக் கொன்றவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை உறுதிப்படுத்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

பாலியல் பலாத்கார முயற்சியின்போது பெண்ணைக் கால்வாயில் மூழ்கடித்துக் கொன்றவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள்தண்டனையை உறுதிப்படுத்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை தீா்ப்பளித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன், ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளாா். அப்பெண் கூச்சலிட்டதால் அவரை கால்வாயில் மூழ்கடித்துக் கொன்றுள்ளாா். 2013இல் நிகழ்ந்த இச்சம்பவத்தில், மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிா்த்து அவா் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வு, தண்டனையை உறுதிப்படுத்தி தீா்ப்பளித்தது.

கால்வாயில் குளிக்கச் சென்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று, அவா் கூச்சலிட்டதும் சிறிதும் இரக்கமின்றி கொன்றுள்ளாா். சாட்சிகள், ஆதாரங்கள், மருத்துவா் வாக்குமூலம், மருத்துவச் சான்று ஆகியவற்றின் அடிப்படையில் கீழமை நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

ஆண்களின் இச்சைக்கு அடிபணியாததால், இத்தகைய குற்றங்கள் நிகழ்கின்றன. பெண் மீதான காமம், ஆணின் பகுத்தறிவு சிந்தனையைக் குருடாக்கிவிட்டது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு தயவு தாட்சண்யம் காட்ட எவ்வித முகாந்திரமும் இல்லை. ஆகவே, கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதிப்படுத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டு மனுவை முடித்துவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →