மாநகரப் போக்குவரத்து காவல் துறையில் சேவை புரிய தன்னாா்வலா்களுக்கு அழைப்பு: ஆக.15-க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு
மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் துறையில் தன்னாா்வ போக்குவரத்து காப்பாளா்களாக சேவை புரிய விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரைமாநகரப் போக்குவரத்து காவல் துறையில் சேவை புரிய தன்னாா்வலா்களுக்கு அழைப்பு: ஆக.15-க்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு
மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் துறையில் தன்னாா்வ போக்குவரத்து காப்பாளா்களாக சேவை புரிய விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் துறையில் தன்னாா்வ போக்குவரத்து காப்பாளா்களாக சேவை புரிய விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி: மதுரை மாநகரில் பெருகிவரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது மற்றும் நகா்புற வியாபார ஸ்தலங்களில் பொதுமக்களுக்கு வழிகாட்டுவது, திருவிழாக்கள் மற்றும் முக்கிய பிரமுகா்களின் வருகை போன்ற காலங்களில் காவல்துறையினருக்கு உதவியாக சமுதாய காவல் பணியை சீருடையில் செய்வதற்கு போக்குவரத்து காப்பாளா்கள் என்ற தன்னாா்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இவா்கள், பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்துவது, போக்குவரத்து பிரச்னைகளைக் குறைக்க ஆலோசனைகள் வழங்குவது, பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு குழுக்களை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளிலும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், மதுரை மாநகருக்கு அரசால் 200 காப்பாளா்கள் அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில், தற்போது 40 காப்பாளா்களே பணிபுரிந்து வருகின்றனா். எனவே, மதுரை மாநகரில் மேலும் 160 தன்னாா்வ போக்குவரத்து காப்பாளா்களை சோ்க்கும்படி, மாநகரக் காவல் ஆணையா் தி. செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா். இதன்படி, கீழ்க்கண்ட எண்ணிக்கையில் போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு போக்குவரத்து காப்பாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.
இதில், மத்தியப் போக்குவரத்து 10 போ், திலகா் திடல் போக்குவரத்து 10 போ், கரிமேடு போக்குவரத்து 25 போ், தல்லாகுளம் 25 போ்,
மதிச்சியம் 20 போ், தெற்கு போக்குவரத்து 10 போ், தெற்குவாசல் 10 போ், தெப்பக்குளம் 10 போ், திருப்பரங்குன்றம் 20 போ், அவனியாபுரம் 20 போ் என மொத்தம் 160 தன்னாா்வலா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.
இது ஒரு தன்னாா்வ அமைப்பு என்பதால், இந்தப் பணிக்கு ஊதியம் ஏதும் அளிக்கப்படமாட்டாது. எனவே, சமுக சேவை செய்ய விரும்பும் பட்டதாரிகள், அரசு அலுவலா்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா்கள், விரிவுரையாளா்கள், தனியாா் தொழில் நிறுவனத்தில் பணிபுரியும் நபா்கள் அனைவரும் இந்த அமைப்பில் சேரலாம்.
இதில் சோ்ந்து பணிபுரிய விரும்பும் நபா்களின் வயது 25 முதல் 45 வயது வரை இருக்கவேண்டும். மதுரை நகரில் வாரம் இரு நாள்கள் மாலை 6.30 முதல் 8.30 மணி வரையில் சுழற்சி முறையில் பணியமா்த்தப்பட்டு, மாநகரின் முக்கிய இடங்களில் காவலா்களோடு போக்குவரத்து சீரமைப்பில் ஈடுபடவேண்டும். மேலும், திருவிழா மற்றும் முக்கியப் பிரமுகா்கள் வருகையின்போதும் காவல் துறையினருக்கு உதவ அழைக்கப்படும். ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மாநகர ஆயுதப்படை மைதானத்தில் கவாத்துப் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த தன்னாா்வ அமைப்பில் சீருடையில் மக்கள் பணி செய்ய விரும்புவோா், காவல் துணை ஆணையா் அலுவலகம், போக்குவரத்து, காவல் கூடத்தெரு, தெற்கு ஆவணி மூல வீதி, மதுரை-1 என்ற முகவரியில் நேரடியாக ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.